இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சி – தில்லான ‘தாதா’வாக வலம் வரும் சாருஹாசன்!
சாருஹாசன் நடிப்பில் பல மாதங்களாக ரிலீசுக்கு தயாராகி வரும் தாதா 87 திரைப்படம் ஒருவழியாக வருகிற மார்ச் ஒன்றாம் தேதி ரிலீசாகிறது.
உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88வது வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 வயது முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா 87 படத்தின் மூலமாக சாருஹாசனுக்கு கிடைத்துள்ளது.
“Ageing Superstar” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார்.
இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.