ரெண்டாவது தடவையும் செஞ்சிருவேன்… : தயாராகிறது தனுஷின் ‘மாரி 2’!

Get real time updates directly on you device, subscribe now.

dhanush1

ரு படம் ஹிட்டானால் அதன் அடுத்தடுத்த பாகங்கள் வருவதும் தமிழ்சினிமாவில் சர்வ சாதாரணமாகி விட்டது. சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் எஸ் 3 யாக வர இருக்கிறது. முந்தைய இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

இப்போது சூர்யாவைப் போலவே தனது நடிப்பில் ஹிட்டான படங்களின் அடுத்த பாகங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகர் தனுஷ்.

சில நாட்களுக்கு முன்பு தான் தனது மாமனார் ஆசீர்வாதம் செய்ய ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் ‘விஐபி 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார் தனுஷ். ரஜியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

Related Posts
1 of 36

இந்நிலையில் தனுஷின் நடிப்பில் பக்கா கமர்ஷியல் ஹிட்டான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

முதல் பாகம் மாரியை இயக்கிய பாலாஜி மோகன் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்போதைக்கு அப்படத்தின் திரைக்கதையை பக்காவாக முடித்திருக்கும் பாலாஜி மோகன் படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் இந்த பாகத்திலும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை என அடுத்தடுத்து படங்களை தனுஷ் கமிட் செய்து வருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.