‘சிம்புவுடன் இனைந்து நடிக்க மறுத்தேன்’ – தனுஷ் ஓப்பன் டாக்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
மூன்று பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தில் தனுஷுடன் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இந்த மாதம் அக்டோபர் 17-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இப்படத்தைப் பற்றி தனுஷ் பேசியபோது, ”வெற்றிமாறனுடன் மீண்டும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ‘வடசென்னை’ படம் மூன்று பாகங்களாக ரிலீசாக இருக்கிறது. இரண்டாம் பாகத்துக்காக 20 சதவீத காட்சிகள் தயாராக இருக்கிறது. அதன்பிறகு மூன்றாம் பாகத்துக்கான காட்சிகளை எடுப்போம். அதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நானும் வெற்றிமாறனும் இன்னொரு கதையம்சமுள்ள படத்தில் சேர இருக்கிறோம். அந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் ஆரம்பிக்க இருக்கிறது.
இந்த படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஒருவேளை சிம்பு நடிப்பதாக இருந்தால் அதில் ஒரு முக்கியமான கேரக்டர் இருப்பதாகவும் அதில் நீங்கள் நடிக்க முடியுமா? என்றும் வெற்றிமாறன் என்னிடம் கேட்டார். ஆனால் சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை என்று சொல்லி நடிக்க மறுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ‘வட சென்னை’ கதை என்னைத் தேடி வந்தபோது நடிக்க சம்மதம் சொன்னேன்.
‘வட சென்னை’ படத்தில் அமீர் சார் வேற லெவல நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது. வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்காக இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.