‘கொடி’ தீபாவளி ரிலீஸ்! : அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தனுஷ்

துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அன்பு மற்றும் கொடி ஆகிய கதாபாத்திரத்தின் பெயர்களில் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பரில் பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கொடி திரைப்படமும் தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
கொடி படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட எந்த விளம்பர விஷயங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் இந்த ரிலீஸ் செய்தியை இன்று தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் அறிவித்த உடனேயே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் வந்து சாதனை படைத்திருக்கிறது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் இணைந்து இப்படத்தை அதிக பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.