தமிழகமெங்கும் 7 கோடி வசூல்! : டப்பிங் படங்களின் சாதனையை முறியடித்த ‘தோனி’

Get real time updates directly on you device, subscribe now.

dhoni

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘எம்.எஸ்.தோனி: தி அன் டோல்டு ஸ்டோரி’ படம் சென்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீசானது.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் அருண் பாண்டே இணைந்து தயாரித்த இந்தப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தும்,. சாக்‌ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர். தோனியின் வாழ்க்கை வரலாறு என்பதால் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு திரைக்கு வந்த இந்தப்படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

மிகப்பெரிய எதிர்ப்போடு திரைக்கு வந்த இந்தப் படத்துக்கு அஜித், விஜய் போன்ற முன்னணி மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இணையான வசூல் கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் இந்தப்படம் தமிழகமெங்கும் இதுவரை 7 கோடி ரூபாயை வசூல் செய்து முந்தைய டப்பிங் படங்களில் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. அதோடு இன்றுவரை இப்படம் தமிழகத்தில் வெளியான இடங்களில் எல்லாம் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய திரையரங்கில் கூடுதலான திரைகளிலும், அதிக காட்சிகளாகவும் திரையிட்டு வருகின்றார்கள்.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல சினிமாவிலும் சிக்ஸர் சாதனையை நிகழ்த்தி விட்டார் ‘தோனி’.