ஹீரோ ஆசை : ஹிப்ஹாப் ஆதியை உசுப்பேத்தி விட்ட சுந்தர்.சி!
தமிழ் இசை ஆல்பங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் “தப்பெல்லாம் தப்பே… இல்லை” என்ற பாடலைப் பாடி சினிமாவில் பாடகராக அறிமுகமானவரை இயக்குநர் சுந்தர்.சி தனது ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மணை 2, கதகளி படங்களுக்கு இசையமைத்தவர் தற்போது 5 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சுந்தர்.சி தான் தற்போது இவரை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்துகிறார்.
என்னுடைய ஆல்பங்களில் நானே நடித்து, ஆடியிருக்கிறேன். அந்த அனுபவம் தான் ஹீரோவாக்கியிருக்கிறது. ஆனால் ஹீரோவாகணும் என்று நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. நானே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, தயாரிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சுந்தர்.சி சார் எல்லா வேலையையும் நீங்களே பார்த்துக்குங்க நான் தயாரிச்சுக்கிறேன் என்று முன் வந்தார். அவர் தானே என் சினிமா கதவை திறந்து விட்டவர். நடிப்பு கதவையும் அவரே திறக்கட்டும் என்ற சம்மதித்தேன்.
இது என்ஜினீயரிங் மாணவர்களிடையே நடக்கும் கதை. என்னுடைய அனுபவமும் நிறைய இருக்கிறது. இசைத் துறையில் நிறைய சாதிக்க துடிக்கும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை. எனது ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான மியூசிக் ட்ரீட்மெண்ட் இதில் இருக்கும். என் அப்பா ஒரு தமிழ் ஆர்வலர். அதனால் எனது பாடல்களில், படங்களில் அது வெளிப்படும். பாரதியை பற்றி நிறைய படித்திருக்கிறேன். அதன் பாதிப்பு தான் இந்த தலைப்பு. படம் வெளி வந்த பிறகு நிறைய பேர் மீசையை முறுக்கிக் கொண்டு திரிவார்கள். என்றார் ஆதி.
தமிழுக்கு பெருமை!