அந்த கோபத்தில் தான் கிராமத்துக்குள் படம் எடுக்கப் போனேன்! : பாரதிராஜா மனம் திறந்த பேச்சு

அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மையத்தை அடிபடையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ”கனவு வாரியம்.”
இப்படம் திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது இது மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நிருவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்ப்படம் என்பது மற்றுமொரு பெருமையாகும்.
இன்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா,இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிருவனதின் இயக்குனர் சிவன்(ISRO),பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார்,நல்லகீரை ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு
வெதர்மேன்(Weather Man)ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ”இப்போதுள்ள இளைஞர்கள் கணிணியில் வேலை கார்ப்பரேட் வாழ்க்கை என்று இல்லாமல் மீண்டும் ஆரம்ப கால இயற்க்கை விவசாயத்தை பின்பற்றுவது பெருமையக இருக்கின்றது என்றும் என்னுடைய மகனும் இப்பொழுது இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது என்றும் விழா மேடையில் கூரினார்
விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிகரம் பாரதிராஜா பேசுகையில் இப்போதுள்ள தமிழ் சினிமாவில் எடுக்கும் மாஃபியா படங்களுக்கு நடுவில் இப்படம் மண்வாசனயை கொடுத்திருக்கிறது அதுமட்டுமின்றி நம்முடைய பண்பாடுகளையும்,பழக்கவழக்கங்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு என்றும்
இயக்குனரின் தந்தை ஆணழகன் சிதம்பரம் அவர்களை பற்றியும் சிவந்தி ஆதித்தனார்,எம்.ஜீ.ஆர் இருவரும் அவருடன் எப்படி நட்புடன் இருந்தனர் என்பதை பற்றியும் கூறினார்,
என்னுடைய ஆரம்ப காலங்களில் செட்டுக்குள் எடுக்கப்படும் சினிமாக்களை கண்டு கோபம் அடைவேன். உள்ளே சென்றால் ஒரே பெயிண்ட் நாற்றம் அடிக்கும். அது எனக்கு கோபத்தை தரும். அந்த கோபத்தில் தான் அதன் பின்பு நான் எடுக்கிற படங்களுக்காக கேமாராவை செட்டிற்குள் இருந்து வெளியே கிராமத்திற்கு எடுத்து சென்றேன். அந்த கோபம் தான் என்னை கிராமத்து படங்களை தொடர்ந்து எடுக்க வைத்தது என்றும் கூறினார், மேலும் அவர் விழாவில் கலந்து கொண்டிருந்த சிறப்பு அழைப்பாளர்களையும் கெளரவப்படுத்தினார்.
படத்தின் இயக்குநர் அருண் சிதம்பரம் இந்த படத்தை பற்றி பேசுகையில் ”இப்படமானது புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்குபவர்களை
தேடி கண்டுபிடிக்கப்படவேண்டும், அதுமட்டுமல்ல அவர்களை கொண்டாட வேண்டும் என்றும் மேலும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பு” என்றும் கூறினார்.