“பொன்மகள் வந்தாள்” மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Get real time updates directly on you device, subscribe now.


நேற்று அமேசான் இணையத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

Related Posts
1 of 19

அதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று.அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என அந்த கடிதத்தில் இயக்குநர் பிரெட்ரிக் தெரிவித்துள்ளார்