சிம்புவின் புதுப்பட டைட்டில் என்ன? – நாளை அறிவிக்கிறார் வெங்கட் பிரபு
முன்பு போல் இல்லை.
இப்போதெல்லாம் காலை 7 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து ‘ஷார்ப்’ காட்டுகிறார் சிம்பு என்பது தான் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் பரபரப்பு.
அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் தன் போர்ஷனை எந்தவித பிரச்சனையில் இல்லாமல் முடித்துக் கொடுத்த சிம்பு அடுத்தடுத்து புதுப்படங்களையும் கமிட் செய்து வருகிறார்.
அந்த வரிசையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
‘கங்காரு’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப் போகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்க இருக்கும் நிலையில், படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை ஜூலை 10-ம் தேதி வெளியிட இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக இப்படத்தில் வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருந்தாலும் இந்தச் செய்தியை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.