அதென்ன என்.ஜி.கே? – வெளிவந்தது சூர்யா படத்தின் டைட்டில் ரகசியம்

Get real time updates directly on you device, subscribe now.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியான போது அந்த டைட்டிலைப் பார்த்த அத்தனை பேரும் கொஞ்சம் குழம்பித்தான் போனார்கள்.

ஆமாம் ‘என்.ஜி.கே’ என்ற டைட்டிலோடு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்ததும் அதென்ன என்.ஜி.கே? என்று எல்லோரும் ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பான சூர்யா ரசிகர்கள் ஆளாளுக்கு இது எந்த மாதிரியான டைட்டிலாக இருக்கும் என்று குழம்பினர்.

Related Posts
1 of 34

தற்போது அந்த டைட்டிலுக்கான விளக்கம் வெளியாகியிருக்கிறது. ஆமாம், ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் என்.ஜி.கே என்ற டைட்டிலின் சுருக்கமாம். இது படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயராம்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

படம் தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது.