‘தேவி’யின் வெற்றி என் வாழ்க்கையில் முக்கியமானது : இயக்குநர் விஜய் நெகிழ்ச்சி
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீசான படம் தான் ‘தேவி’.
பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் மோசமில்லாத வசூலுடன் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த வெற்றியை பகிர்ந்து கொண்டது ‘தேவி’ டீம்.
தமன்னாவைத் தவிர படத்தில் பங்கு கொண்ட அத்தனை பேரும் ஆஜராகியிருந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஜய் நெகிழ்ச்சியுடன் பேசினார்… ”இந்தப்படம் எனக்கு கெடைச்சதுக்கு காரணம் ஐசரி கணேஷ் சார் தான். அவருக்கு ரொம்ப நன்றி. பிரபுதேவா சார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்கிட்ட நெறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். இன்னும் அவரை வெச்சு நெறைய படங்கள் பண்ணனும்னு ஆசையா இருக்கு.
உங்களுக்கே தெரியும் என் கேரியர்ல நெறைய தோல்விகள் வந்தப்போ அது என்னோட மனசை ரொம்பவே பாதிச்சிருக்கு. ஆனால் இந்த தேவியோட வெற்றி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான வெற்றி. அது எனக்கு சந்தோஷத்தை தருது.
இந்தப்படம் எடுக்கும் போதே எங்க டீமுக்கு நெறைய வேண்டுதல்கள் இருந்துச்சு, வாழ்த்துகள் இருந்துச்சு. கண்டிப்பா இந்தப்படம் ஹிட்டாகும்னு நெறைய பேர் சொன்னாங்க. ‘ரெமோ’, ‘ரெக்க’ ரெண்டு படங்கள் கூட வந்தாலும் எங்களுக்கான இடத்துல நாங்க ஜெயிச்சிருக்கோம் அப்படித்தான் இந்த வெற்றியைச் சொல்லுவேன் என்றார்.