இயக்குநர் யார் கண்ணன் இயற்றிய பாடல்

தற்போது உலகமே கொரோனா நோய் தொற்றின் காரணமாக தன் இயல்பிலிருந்து முடங்கிப் போய், மக்களும் பல இன்னல்களை தினம்தினம் எதிர்கொண்டு வருகின்றனர்.
நோய் தொற்றும், ஊரடங்கும் அரங்கேறிய சூழலில் தென்மாவட்ட கிராமத்து பெண் ஒருத்தி தன் மனதில் எழும் எண்ணங்களையும், அவளைப் போன்ற சாமனியர்கள் எதிர்கொள்ளும் வேதனைகளையும் மனவலியோடு பாடலாக வெளிப்படுத்துகிறாள். துன்பங்கள் பல இப்போது சந்தித்து வந்தாலும், இவை அனைத்தும் விரைவில் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பி விட “நல்ல ஒரு சேதி வரும்” என்ற அவளின் நம்பிக்கை மொழியுடன் பாடல் முடிவு பெறும் வகையில் அமைக்கப்பெற்றது.

திரைப்பட இயக்குநர், கவிஞர். “யார்” கண்ணன் அவர்களின் நுட்பமான, எளிய வரிகளிலும்

இசையமைப்பாளர் C.சத்யா அவர்களின் ஆழமான ஆர்ப்பாட்டமில்லா மெல்லிய இசையிலும்,

பாடகி மீனாட்சி இளையராஜா அவர்களின் மனதை வருடும் குரலிலும்,

ஜ.ராஜ்கோவிந்த் அவர்களின் பொருத்தமான காட்சியமைப்பிலும் நேர்த்தியான படத்தொகுப்பிலும் இப்பாடல் அமைந்திருப்பது மிகச்சிறப்பு.