பாபி சிம்ஹா படத்தில் நடிக்க தமிழக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அழைப்பு

Get real time updates directly on you device, subscribe now.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு வரும் படம் ”சீறும் புலி”.

இதில் பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் காட்சிபடுத்துகின்றனர்.

‘ஸ்டூடியோ 18’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா, பிரபாகரனாக நடிக்கிறார். படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

Related Posts
1 of 8

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பல காட்சிகள் இடம்பெறும் இப்படத்தில் தமிழகத்தில் தை திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய இரண்டு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற தமிழ் வீரர்களுக்கு ”சீறும் புலி” திரைப்படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணுடன் venkyphysio18@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.