“பாலிவுட் போலவே தமிழ்சினிமாவிலும் குருப்பிஸம் உண்டு”- மாநாடு தயாரிப்பாளர்

பாலிவுட்டில் சமீபத்தில் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் நெபடிஸம்& குருப்பிஸம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்படியான சூழல் தமிழ்சினிமாவிலும் இருப்பதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ்காமாட்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

“பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான்.

தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார். அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.

– சுரேஷ் காமாட்சி,
தயாரிப்பாளர்/ இயக்குநர்