மகிழ் திருமேனியோடு தமிழ்ப் புத்தாண்டில் ‘தடம்’ பதிக்கும் அருண் விஜய்!

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” என்ற படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும், இப்படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் ஏற்கனவே வெளியான “தடையறத்தாக்க” பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது இவர்களின் கூட்டணியில் தயாராகியிருக்கும் “தடம்” படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் இன்று துவங்கியது. இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.