DNA- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

தாய்மையைப் பேசும் DNA

ஒரு குழந்தை திருடுபோவதற்குப் பின்னாலுள்ள அபாயங்களை எல்லாம் பேசியுள்ளது படம். அதர்வாவிற்கு குடி தான் முதல் வாழ்வு என்பதாக வாழ்கிறார். அதற்கு காரணமாக அவரது காதல் தோல்வி இருக்கிறது. நண்பர்களும் குடும்பமும் அவரை மீட்டெடுத்து நாயகி நிமிஷாவை அவருக்குத் திருமணம் முடித்து வைக்கிறார்கள். மனநலத்தில் சின்னதாக குறைபாடுள்ள நிமிஷாவை திருமணத்திற்குப் பின் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார் அதர்வா. இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தை உடனே திருடப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து குழந்தையைக் கண்டுபிடிப்பதே மீதிப்படம்

ஓவராகவுமில்லாமல் சுமாராகவுமில்லாமல் ஒரு மையமான நடிப்பையே வழங்கியுள்ளார் அதர்வா. நன்றாக ஸ்கோர் செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் சில இடங்களில் கோட்டை விட்டுள்ளார். நிமிஷா சஜயன் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஆகச்சிறந்த நடிப்பு அவரது நடிப்பு. சில இடங்களில் ரசிகர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்த்தால் அதற்கு நிமிஷாவே காரணம். ரமேஷ் திலக், சேத்தன், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பிற நடிகர்களும் நல்லதொரு பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்

கதையின் இயல்பை மீறாத வகையில் பின்னணி இசையை வழங்கியுள்ளார் ஜிப்ரான். பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் தனது பனியை திறம்படச் செய்துள்ளார். எடிட்டர் ஓவர்டைம் ஒர்க் செய்து முன்பாதியில் நிறைய வெட்டி வீசியிருக்கலாம்

படத்தின் துவக்கக் காட்சிகள் எதுவும் படத்தின் முடிவுக்காட்சிகளோடு சம்பந்தமில்லாமல் இருப்பது பெரிய மைனஸ். லாஜிக் என்பது படத்தில் மருந்துக்கும் இல்லை. பின்பாதியில் நடக்கும் பரபர சம்பவங்கள் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது

DNA – Just OK ரகம்
2.75/5