டாக்டர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

நல்ல பையன் லுக்கில் இருக்கும் டாக்டரான சிவகார்த்திகேயனை ரொமான்ஸாக் எமோஷ்னலாக இல்லை என்று நிராகரிக்கிறார் நாயகி பிரியங்கா அருள் மோகன். அந்தக் காட்சியிலே பிரியங்காவின் அண்ணன் மகள் கடத்தப்படுகிறாள். அதற்கு சிவா உதவ…அடுத்தடுத்து அவிழும் ட்விஸ்ட்கள் தான் டாக்டர் படத்தின் கதை.

கதையாகப் பார்த்தால் பெரிய திரில்லர் டைப். ஆனால் அதை தன் சாமர்த்தியமான திரைக்கதையால் நல்ல ப்ளாக் ஹியூமர் படமாக மாற்றி இருக்கிறார் நெல்சன். சிவகார்த்திகேயன் கேரக்டரை மிக அழகாக வடித்திருக்கிறார். ரொம்ப அமைதியான நடிப்பு சிவாவிற்கு அம்சமாக பொருந்தி இருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் முகத்தில் அவ்வளவு பிரகாசம். நடிப்பும் பிரமாதம். யோகிபாபு ரெடின் கிங்க்ஸ்ட்லி கூட்டணி இந்தப்படத்திலும் அதகளம் செய்திருக்கிறார்கள். கிங்ஸ்ட்லி இந்தப்படத்தில் இருந்து இனி பெரிதாக கவனிக்கப்படுவார். வினய் வில்லன் கேரக்டரை சரியாகச் செய்தாலும் அவரது கேரக்டர் வார்ப்பில் வீரியமில்லை என்பதே நிஜம். அர்ச்சனாவின் நடிப்பும் அவர் கணவராக வருபவர் நடிப்பும் தேவையான அளவுக்கு இருக்கிறது.

மெட்ரோ ட்ரைனில் ஒரு பைட் சீக்வென்ஸ் இருக்கிறது. அதை மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் எல்லா பிரேமிங்கும் அழகாக இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கு எக்ஸ்ட்ரா லைக்ஸ். அனிருத்தின் பின்னணி இசை கூடுதல் பலம்.

Related Posts
1 of 4

சட்டென நகரும் முன்பாதியில் இருக்கும் நேர்த்தி பின்பாதியில் குறைவாகத் தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதைச் சொன்னாலும் வில்லன் டீம் நம்புவதும் நமக்கு நம்புவது போலில்லை. அதனாலே அந்தப்பெரிய க்ரைம் நமக்கு பெரிதாக கன்வே ஆகாமல் போகிறது. இருந்தும் படத்தை ஸ்ட்ராங்காக தூக்கி நிறுத்திவிடுகிறது காமெடி ஏரியா. குறைகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குநர் நெல்சன்

டாக்டர்- ஆபரேசன் சக்சஸ்

3.5/5