பிக்பாஸ் ஜூலி நடிக்கும் ‘டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ்’ படப்பிடிப்பு தொடங்கியது!

Get real time updates directly on you device, subscribe now.

ஜய் இயக்கத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்கும் ‘டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தின் துவக்க விழா ஜூன் 22ம் தேதி பாடல் பதிவுடன் தொடங்கியது.

இத்திரைப்படத்தை ரான்ஹார்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் ஆர்.ஜே மீடியாவும் இணைந்து தயாரிக்கிறது, பல ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.தீனா இசை அமைக்கிறார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் வர்ஷா இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

மாணவி அனிதா கதாபாத்திரத்தில் ‘பிக் பாஸ் புகழ்’ நடிகை ஜூலி நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் அஜய் கூறுகையில்…

Related Posts
1 of 2

”இந்த படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தை பார்த்த பிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள்.

வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை. மருத்துவ படிப்பு படிக்கச் முழுத்தகுதி இருந்தும் நம் கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வு முறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கமே காரணம்.

இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆய்வுகூடம் படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்” என்றார்.