போராட்டத்தில் குதிக்க வந்த ‘பிக்பாஸ்’ ஜூலி! – துரத்தியடித்தது போலீஸ்

Get real time updates directly on you device, subscribe now.

Julie

‘ஜல்லிக்கட்டு’ என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் முதலில் வருவது மெரினாவில் நடந்த போராட்டம். அடுத்து அதே போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்ட ஜூலி.

அந்தப் போராட்டத்தில் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தனது தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், கோபத்துக்கும் உள்ளானார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரையில் கோலோச்சி வந்தவர் திடீரென்று சென்னையில் செவிலியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கெடுக்க வந்தார்.

Related Posts
1 of 8

ஏற்கனவே அவர் செவிலியர் வேலை பார்த்தவர் என்பதால் இந்தப் போராட்டத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் வந்திருக்கிறார்.

ஜுலி வந்ததைப் பார்த்த காவல்துறை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. `நானும் செவிலியர்தான். என்னை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதியுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தும் ஜூலியை அனுமதிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதனால் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்று விட்டார்.