ராணுவ வீரன் கெட்டப்பில் தமிழில் அறிமுகமாகும் அல்லு அர்ஜூன்!

Get real time updates directly on you device, subscribe now.

கேஷ்பாபுவைத் தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் இன்னொரு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் “என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் சரத்குமார், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு நடிகர்களுடன் நதியா மிக முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்.

வி.வம்சி இயக்கும் இப்படத்தை ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். விஷால்- சேகர் இரட்டையர் இசை அமைக்க, ராஜீவன் கலை இயக்கத்தில், பா.விஜய் வசனம் மற்றும் பாடல்கள் எழுதுகிறார். “ராமலெக்ஷ்மி சினி கிரியேஷன்ஸ்” சார்பில் லகடப்பாடி ஸ்ரீஷா ஸ்ரீதர் இப்படத்தை தயாரிக்கிறார்.