நல்லா ஜால்ரா அடிக்கிறீங்க ஜீ… : விக்னேஷ் சிவனை வெச்சு செஞ்ச சூர்யா ரசிகர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

suriya1

தான் வேலை செய்த படத்தைப் பற்றி எந்த அப்டேட்டையும் தராமல் மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு ஜால்ரா தட்டினால் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஜால்ரா தட்டியதைப் பார்த்து விக்னேஷ்சிவனை வறுத்தெடுத்து விட்டார்கள் சூர்யா ரசிகர்கள்.

சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ்சிவன். பல மாதங்களாக படப்பிடிப்பில் இப்படம் எப்போது ரிலீசாகும் என்பது தான் சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ரிலீஸ் தேதி ஏற்கனவே அடுத்த ஆண்டு ஜனவரி என்று சொல்லப்பட்டு விட்டாலும் அவ்வப்போது அந்தப் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் தான் சூர்யா ரசிகர்களுக்கு ஆறுதல்.

ஆனால் விக்னேஷ் சிவனோ தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றி எந்த தகவலையும் அப்டேட் செய்யாமல் மற்ற விஷயங்களை மட்டுமே தொடர்ந்து ஷேர் செய்வது சூர்யா ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே தனது பிறந்தநாளைக் கொண்டாட நயன் தாராவோடு நியூயார்க் நகரம் சென்றிருந்த விஷயத்தை புகைப்படங்களோடு வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அதைப் பார்த்த நெட்டிஷன்கள் கமெண்ட் என்ற பெயரில் கிழித்து தொங்க விட்டிருந்தார்கள்.

Related Posts
1 of 46

இப்போது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டி கமெண்ட் போட்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடிக்க தமிழ், தெலுங்கு இருமொழிகளில் ரிலீசாகியிருக்கிறது ஸ்பைடர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதோடு தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் மசாலாவை அதிகமாகவே எதிர்பார்ப்பவர்கள் என்பதால் அவர்களை முழுமையாக படம் திருப்திபடுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்பைடர் படத்தைப் பற்றி ”முருகதாஸ் சார் திரைக்கதை எழுதுவதில் மாஸ்டராக உள்ளதை பற்றி தான் ஸ்பைடர் படம்” என்று பாராட்டியிருகிறார் விக்னேஷ் சிவன்.

அதைப் பார்த்த சூர்யா ரசிகர்களோ அதெல்லாம் இருக்கட்டும் ”தானா சேர்ந்த கூட்டம் பற்றிய அப்பேட் எங்கே சார்”

”ஜி ஜால்ரா அடிச்சு விடு”. ”தானா சேர்ந்த கூட்டம் நல்லா பண்ணுங்க” என்றும் பதிலுக்கு நக்கலடித்து கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

சூர்யாவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படம் தோல்விப்படமாகி விட்டது. அப்படிப்பட்டவரைப் போய் திரைக்கதையின் மாஸ்டர் என்று கொஞ்சம் ஓவராகவே விக்னேஷ் சிவன் பாராட்டியது தான் சூர்யா ரசிகர்களுக்கு பொறுக்க முடியவில்லையாம்.