கீர்த்தி சுரேஷுக்கு கடும் எதிர்ப்பு – பதிலடி கொடுத்து காப்பாற்றிய ரசிகர்!

Get real time updates directly on you device, subscribe now.

றைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது.

தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும், தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். படத்தில் சமந்தா ஒரு பத்திரிகை நிருபராகவும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். நாக் அஸ்வின் என்பவர் இயக்கி வருகிறார்.

முன்னதாக இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியானதும் சாவித்திரி வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று பலரும் விமர்சித்தனர். அதிலும் முக்கியமாக சாவித்திரியின் வாழ்க்கையை படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பழம்பெரும் நடிகை ஜமுனா, சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

ஜமுனாவின் இந்த விமர்சனத்துக்கு ”சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்துத் தெரிந்துகொண்டு தான் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்” என பதிலடி கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

Related Posts
1 of 15

கீர்த்தி சுரேஷ் சொன்னது உண்மை தான் என்று நம்பும் விதமாக அவரது அதி தீவிர ரசிகர் ஒருவர் ‘நடிகையர் திலகம்’ படத்தின் போஸ்டர் ஒன்றை அசத்தலாக வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்.

அதில் கீர்த்தி சுரேஷின் தோற்றம் அப்படியே சாவித்திரியை பார்ப்பது போலவே தத்ரூபமாக இருக்கிறது. பழைய ஜெமினிகணேசன் – சாவித்திரி இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைப் போலவே டிசைன் செய்து அச்சு அசலாக அதே தோற்றத்தில் கீர்த்தி சுரேஷையும் – துல்கர் சல்மானையும் வடிவமைத்து தெறிக்க விட்டிருக்கிறார் அந்த ரசிகர்.

ரசிகர் செய்த இந்த டிசைன் மூலம் சாவித்திரி வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்பவர்களுக்கு பதிலடி கொடுத்து அந்த சர்ச்சையிலிருந்து அவரை காப்பாற்றியிருக்கிறார் ரசிகர். அதோடு ”எங்கள் தலைவி கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்துக்கு பொருத்தமானவர், பொருத்தமான நடிகையைத்தான் இயக்குநரும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷின் அதி தீவிர ரசிகர்கள்.

நீங்கதான்யா உண்மையான ரசிகர்கள்!