கார் விபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகி பலி – துக்கம் தாளாமல் கதறி அழுத கார்த்தி

Get real time updates directly on you device, subscribe now.

கார்த்தி மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) இவர் நேற்று (டிசம்பர் 26-ம் தேதி) முன்பு தனது நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். அவர்கள் சென்ற கார் தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி

ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

Related Posts
1 of 36

இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் நடிகர் கார்த்தி நேரில் சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாளாமல் கதறி அழுதார் கார்த்தி. இறுதிச் சடங்கில் திரளான மாவட்ட நிர்வாகிகளும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, ”கார்களில் பயணம் செய்பவர்கள் நள்ளிரவு நேர பயணத்தினை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தலைபோகும் வேலையாக இருந்தாலும் இரவில் தூங்கி விட்டு பகலில் பயணம் செய்யுங்கள் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

மரணமடைந்த ஜீவன்குமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.