கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி

Get real time updates directly on you device, subscribe now.


பேரழிவுகரமான கோவிட் -19 வைரஸ்
உலக அளவில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருப்பதை நாம் அறிவோம். சக குடிமக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மக்களுக்கு உதவிட, கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் ஏற்கனவே (FEFSI) பெப்சிக்கு ரூ 15 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறது.

முன்னதாக தமிழக அரசு, அதன் கோவிட் -19 பேரிடர் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம், மல்டிபிளெக்ஸை இயக்கும் ஏஜிஎஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் இக்குழுமத்தின் மூலோபாய முதலீடுகளை நிர்வகிக்கும் கல்பாத்தி இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இக்குழுமம் கல்பாத்தி சகோதரர்கள், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.