நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்!
இந்தச் செய்தியையெல்லாம் நீங்கள் நம்புறீங்களோ? நம்பளையோ? ஆனா சொல்லி வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு.
‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடிக்கப் போய் இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் வலையில் விழுந்தார் நயன்தாரா.
சிம்பு, பிரபுதேவா ஆகியோர்களுடனான காதல் தோல்விகளுக்குப் பிறகு ஆர்யாவுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நயன்தாராவின் புதிய காதலர் விக்னேஷ் சிவன் என்பதால் ‘யாருப்பா நீ புஷ்பா புருஷனா’ என்று ரசிகர்களே இருவரையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.
ஆனால் ஊர் உலகம் என்ன வேண்டுமானாலும் பேசிப்போகட்டும் என்று நயனும், விக்னேஷ்சிவனும் தங்கள் காதலை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இடையில் நயன் – விக்னேஷ் சிவன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்று கூட செய்திகள் வெளியானது.
அப்படி வந்த தகவல் இப்போது பொய் என்று தெரிய வந்திருப்பதோடு இருவருமே இப்போது டீப் லவ்வாகி யாரும் நம்ப முடியாத செய்தியை இந்த உலகுக்கு விரைவில் சொல்லப்போகிறார்களாம்.
ஆமாம் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்பது தான் அந்த அதிர்ச்சி செய்தி.
சமீபகாலமாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகின்றன. அதே போல அவர்கள் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஜோடியாக சென்றும் வருகிறார்கள்.
சென்ற வாரம் நடந்த சைமா விருது வழங்கும் விழாவிற்கு இருவரும் சேர்ந்தே வந்திருந்தனர். ‘நானும் ரவுடி தான்’ படத்திற்காக இருவருமே விருது பெற்றுள்ளனர். விழாவில் அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி வெளிப்படையாகவே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தொடர்ந்து நெருக்கமாக பழகி வருவதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என்பது தான் கோலிவுட் பிரபலங்களின் கணிப்பாக இருக்கிறது.
கணிப்பு வழக்கம் போல பொய்க்காமல் இருந்தால் சரி!