பிகில் நிலவரம் என்ன? ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாய்ங்கே
இப்போதெல்லாம் ஒருநாளில் நூறுகோடி வசூல் என்ற வார்த்தையை மிகச்சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். அட என்னப்பா நூறுகோடின்னா ஏதோ மூக்குப்பொடி மாதிரி சாதாரணமா ஆயிடிச்சான்னு நடுநிலை மக்கள் வருத்தப்பட்டு உண்மையை அறிய நினைக்கிறார்கள். ஆனால் யார் சொல்வது உண்மை என்பது தான் கடுங்குழப்பமாக இருக்கிறது. ட்விட்டரில் தளபதி பிகில் படம் மூலமாக 250 கோடி வசூலை தாண்டிவிட்டார் என்று கொளுத்திப் போட்டுவிடுகிறார்கள். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் தான் உண்மை நிலவரத்தைச் சொல்ல முடியும் என்று சொன்னால் சிலர் கலவரம் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் இணையத்தில் ஒருசிலர் கொடுக்கிற டேட்டா சரியாக இருக்கிறது. பட் இதுவரை வந்த டேட்டா எதுவும் சரியானதாக இல்லை என்பதே நிஜம்.. அதனால் இன்னும் பிகில் வசூல் நிலவரம் திகில் நிரம்பியதாகத் தான் இருக்கிறது