‘சண்டக்கோழி 2’ : மஞ்சுமாவால் தொடரும் ரோதனை!

விஷாலுக்கும் – இயக்குநர் லிங்குசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமான ‘சண்டக்கோழி 2’ படம் ட்ராப்பாகி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு விஷாலே தனது டிவிட்டரில் அறிவித்தார்.
அதோடு இயக்குநர்கள் படம் இயக்கும் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது என்று லிங்குசாமியின் நடவடிக்கைகளை விமர்சனமும் செய்திருந்தார்.
அவ்வளவு தான் இனிமே ‘சண்டக்கோழி 2’ வராது என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ‘சண்டக்கோழி 2’ ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்று விஷால் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
படத்தின் ஹீரோ, டெக்னீஷியன்கள் என எல்லா தேர்வுகளும் நடந்து படப்பிடிப்பை துவங்க தயாரான நேரத்தில் படத்துக்கு மஞ்சுமா மோகனால் புதிய ரோதனை ஏற்பட்டிருக்கிறது. ஆமாம், இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று லிங்குசாமி குழப்பத்தில் இருந்திருக்கிறார்.
ஏற்கனவே காஜல் அகர்வால் உட்பட பல முன்னணி நடிகைகளை கேட்டுப்பார்த்தும் அவர்களில் யாரும் நடிக்க வராததால் மஞ்சிமா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்த நினைத்திருக்கிறார். அதற்குள் மஞ்சுமா மோகன் இப்படத்தில் கமிட்டாகியிருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
செய்தியை கேள்விப்பட்ட மஞ்சுமா உடனே இதுவரை சண்டக்கோழி 2 படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நானே அதை நேரடியாக தெரிவிப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து விட்டார்.
பேச்சு வார்த்தை நடத்துவதற்குள் நான் சண்டக்கோழி 2 வில் நடிக்கவில்லை என்று ஸ்டேட்மெண்ட் விட்டு விட்டாரே என்று எரிச்சலடைந்த லிங்குசாமி அவருக்குப் பதில் வேறு நாயகியை தேடலாமா என்று யோசித்து வருகிறாராம்.