குறுக்கு வழியில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி! : ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ தயாரிப்பாளர் மீது பைனான்சியர் போத்ரா காட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

bothra

ட்டிப்பணமே வளம் சேர்க்கும் என பணத்தை வாரி இறைக்கிற பைனான்சியர்கள் சில நேரங்களில் ஏன் தான் இந்த தொழிலைச் செய்கிறோமோ? என்கிற நொந்து நூடுல்ஸ் ஆகிற அளவுக்கு பிரச்சனை கழுத்தை நெறிக்கும்.

அப்படி ஒரு நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறார் பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா.

லாரன்ஸ் நடித்து இந்த பிப்ரவரி மாதம் 10 ம் தேதி திரைக்கு வரும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் போத்ராவால் பாங்கை உள்ளுக்குள் தள்ளிய நிலைக்கு போயிருக்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்புக்காக தன் சார்பில் போத்ரா கொடுத்த தொகை ஏழரை கோடி ரூபாய். அதில் வட்டியும் சேர்த்து மொத்தம் 11 கோடி ரூபாயில் இதுவரை வட்டியும் வரவில்லை, முதலும் வரவில்லை. இந்த நிலையில் தான் என்னுடைய பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நீதிமன்றமும் இம்மாதம் 10-ம் தேதி தான் தீர்ப்பை தருவோம் என்று சொல்லிவிட, அதற்குள் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு எதிராக பைனான்சியர் போத்ரா போட்ட வழக்கு முடிவுக்கு வந்து விட்டது. அதனால் இந்தப் படத்தை தாராளமாக விநியோகஸ்தர்கள் வாங்கி தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிற வேலைகளில் இறங்கலாம் என்று தகவல் பரப்பி வருவதாகவும், அது முற்றிலும் தவறான தகவல் என்றும் காட்டமாகிறார் பைனான்சியர் போத்ரா.

Related Posts
1 of 19

”மொட்ட சிவா கெட்ட சிவா ‘ படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன் தான். அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை. தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலைய விட்டவர்.

அந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது. எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ, ரத்து செய்யப்படவோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

மார்ச் 10- ல் படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இது எவ்வளவு மோசடியானது.? இந்தப் படத்துக்கான இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி விமலாவின் மகன் விவேக் சினிமாவில் பாடல்கள் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி குறுக்கு வழியில் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசரி? நீதிபதி என்பவர் யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி, டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்.” என்றார் போத்ரா.