ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்.