காந்தி டாக்ஸ்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

‘உண்மை வாழும் பொய் மாளும்’ என்பதை வசனங்களின்றி மெளனமாகச் சொல்லியுள்ளது காந்தி டாக்ஸ்

அரவிந்தசாமியின் பில்டிங் தொழில் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்படுகிறது. அதனால் நொடிந்து போகும் அரவிந்தசாமி மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார். அவரிடம் இருக்கும் மிச்சசொச்ச பணத்தை கொள்ளையடிக்க வருகிறார் விஜய்சேதுபதி. அவர் திருட வருவதற்கான காரணமாக அவரின் வருமானச் சூழலும், காதல் சூழலும் இருக்கிறது. கொள்ளைக்காக வந்த விஜய்சேதுபதி வாழ்வும், தோல்வியுற்ற அரவிந்தசாமி வாழ்வும் என்ன முடிவை எட்டுகிறது என்பதே படத்தின் மீதித் திரைக்கதை

நடிப்பில் ஒரு எலைட் தன்மையை கொண்டுவந்து சிறப்பான ஒரு நடிப்பைக் கொடுத்துள்ளார் அரவிந்தசாமி. நம் விஜய்சேதுபதி தானொரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை இந்தப்படத்திலும் நிரூபித்துள்ளார். வறுமை சூழ்ந்த முகத்தோடு திரியும் அவர் வசனங்களின்றி உணர்வுகளை கடத்தும் விதம் அபாரம். அதீதிராவ் தனது பங்களிப்பில் துளியும் குறை வைக்கவில்லை. மாஸ் காட்டியிருக்கிறார். ஜாதவ் சித்தார்த்தும் நன்றாக நடித்துள்ளார்

ஏ.ஆர் ரஹ்மான் வழக்கம் போல் பின்னணி இசையால் படத்தை காப்பாற்றியுள்ளார். வசனங்களில்லாத படத்திற்கு அவரின் இசை கதை சொல்கிறது. ஒளிப்பதிவின் நேர்த்தியை உலகப்படங்களோடு ஒப்பிடலாம். சிக்கனமான ஷாட்ஸ்களில் கூட அழகியல் பிரம்மாண்டம் தெரிகிறது

முன்பாதியில் நேர்த்தியாகச் சென்ற படம் பின்பாதியில் ஏகத்துக்கும் சறுக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் படத்தைக் காப்பாற்றிவிட்டது. அறம் தான் வாழ்வின் ஆதாரம் என்று படம் சொல்லும் காந்திய மெசேஜும் சூப்பர்
3.25/5