ஜவான்- விமர்சனம்
ஏற்கெனவே பார்த்த படம் நல்லாருந்தால் திரும்பவும் பார்ப்போம் தானே! இந்த ஜவானும் பார்த்த படங்களின் நீட்சி தான்
சூப்பர் ராபின்ஹுட் ஹீரோ ஷாருக்கான். முதல் காட்சியிலே விவசாயிகளின் கடனான 40,000 கோடியை அரசை அடைக்க வைக்கிறார். அது எப்படி என்பதற்கு ஒரு எமோஷ்னல் ப்ளாஸ்பேக். அடுத்து யார் இந்த ஷாருக்கான் அவரின் லட்சியம் என்ன? என்பதற்கு ஒரு பிக் எமோஷ்னல் ப்ளாஸ்பேக். கொடூர வில்லனை முடிவில் எப்படி கொன்றொழிக்கிறார்கள் ஷாருக்ஸ்? இவ்வளவு தான் ஜவான் படத்தின் கதை
ஷாருக்கானின் எனர்ஜி முதல் காட்சியில் இருந்தே நமக்குள்ளும் பத்திக்கொள்கிறது. இரு வேடங்களில் அவர் காட்டியிருக்கும் வெரைட்டியான நடிப்பும் பாடிலாங்வேஜும் வேறலெவல் ரகம். நயன்தாரா படத்தின் மெயின் டோராகத் தான் வர்றார். விஜய்சேதுபதி அலட்டிக்கொள்ளாமல் அள்ளு கிளப்பியிருக்கிறார். அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கும் செம்ம. தீபிகா படுகோன் வரும் இடங்கள் நல்ல எமோஷ்னல் பேக்கேஜ். மற்ற கேரக்டர்களுக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லை
அனிருத் இசையில் மாஸ் மொமெண்ட்ஸ் நிறைய கிடைக்கிறது. பாடல்களில் ஒரு பாடல் தவிர எல்லாமே ஓகே ரகம். ஒருவேளை ஹிந்தி ஆடியன்ஸுக்கு வெகுவாக பிடிக்கலாம். GK விஷ்ணுவோட கேமரா ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளது. நிறைய ஸ்கீரின்மேட் ஷாட்ஸை எல்லாம் சிறப்பாக மேட்ச் செய்துள்ளனர். ரூபனின் எடிட்டிங்கில் லென்த் தெரிந்தாலும் lag தெரியவில்லை. அனல் அரசு உள்ளிட்ட ஏழு பைட் மாஸ்டர்களும் அசுர உழைப்பை கொட்டியுள்ளனர் congrats!
மின்னலென சீறும் திரைக்கதையில் ஆங்காங்கே சில செண்டிமெண்ட் காட்சிகள், ஒரு அட்டகாசமான ப்ளாஸ்பேக், Heroவிற்கு full பேக்கேஜாக மாஸ் சீன்ஸ் இவை தான் அட்லீ ஸ்டைல். மேலும் காட்சியமைப்புகளில் முழுக்க முழுக்க ஷங்கர் பாணியை கையில் எடுத்துள்ளார். படம் பார்க்கும் போதே நிறைய படங்கள் கண்முன் வந்து செல்கின்றன.
வந்த கதையைத் திரும்பச் சொன்னாலும் திருப்தியாகச் சொல்லியிருப்பதால் ஜவானை நம்பிப் போகலாம்
3/5