குட்டி ஸ்டோரி- விமர்சனம்

தமிழ்சினிமாவின் வியாபாரம் பெரிய வட்டத்திற்கு சென்றாலும் சில படங்களின் கன்டென்ட் & வடிவம் சின்ன வட்டத்திற்குள் சுருங்கி விடுவதை சோகம் என்றே சொல்ல வேண்டும். ஐசரி கணேஷின் தயாரிப்பில் கவுதம் மேனன், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி, ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ஆந்தாலஜி மூவி குட்டி ஸ்டோரி. குட்டி குட்டி படங்களை அழகான ஒரு பெட்டிக்குள் அடக்கி பெரும் படமாக வெளியிட்டிருக்கிறார்கள். நான்கு படங்களின் கதைக்களத்தில் துளியேனும் புதுமை இருப்பதை உணர முடிந்தாலும் எதையும் நல்ல படைப்பாக கொண்டாட முடியவில்லை. கவுதம் மேனனின் எதிர்பாரா முத்தம் படத்தின் கதையில், கவுதமும் அமலாபாலும் நட்பாக இருந்து பிரிந்தவர்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். பிரிவிற்கான காரணம் அப்போது சொல்லப்படுகிறது. டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்கும் படம் மென் உணர்வைத் தீண்ட தவறி விடுகிறது. சோ சேட்! கவுதம் மேனன் அமலாபால் மற்றும் சிறுவயது கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பு மட்டும் ப்ளீச் ரகம்!

ஏ.எல் விஜய்யின் கதையில் கல்லூரி படிக்கும் போது கர்ப்பமாகும் நாயகி கர்ப்பமாகி விடுகிறாள். காரணமான காதலன் இறந்து விடுகிறான். பின் நாயகி அதை எப்படி கேண்டில் செய்தார் என்பதே மிச்சமுள்ள கதை. உயிரோட்டம் உள்ள கதையில் உணர்ச்சி இல்லாத திரைக்கதை பெரும் மைனஸ். சோ இதுவும் சோ சேடு தான்!

வெங்கட் பிரபுவின் படமான லோகம் படத்தைப் பார்க்கும் போது எதோ போகத்திற்குப் போகும் பணக்காரர் இடது கையால் பணத்தை அள்ளி எறிவது போல…கதை திரைக்கதையை இடது கையால் அசால்டாக டீல் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு என்றே தோன்றுகிறது. ஆன்லைனில் புது விளையாட்டு விளையாடும் வருணுக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. கேமில் அந்தப்பெண் தோற்க..காதலும் டமால் ஆகிறது. அடுத்து என்ன? என்பதே படம். பட் படத்தில் அடுத்து என்ன என்று சொல்ல ஒன்றுமில்லை என்பதே சோகம்

பைனலாக பெரும் ஆறுதல் தந்திருப்பது நலன் குமாரசாமியின் ஆடல் பாடல் படம் தான். நான்கு வயது குழந்தையோடு இருக்கும் தம்பதி விஜய்சேதுபதியும், அதிதி பாலனும். விஜய்சேதுபதிக்கு போனில் ஒரு பெண் தொடர்பு கிடைக்கிறது. அந்தப்பெண் தன் மனைவி அதிதிதான் என்பது தெரியவர படத்தில் பெரும் திருப்பம் நிகழ்கிறது. அதன்பிறகும் படத்தில் வரும் விசயங்கள் எல்லாம் அல்டிமேட் ரகங்கள். விஜய்சேதுபதி அதிதி இருவரின் நடிப்பும்..அத்தகைய நடிப்புக்கு வலு சேர்த்த திரைக்கதையும் நலனிசம். நலனின் இந்தப்படத்தை கடைசியாக வைத்திருப்பதிற்கான காரணம் மீதி மூன்று படங்களில் உள்ள தரத்தில் தெரிகின்றன. Full மீல்ஸ் இல்லாவிட்டாலும் அரை வயிறு நிரம்பும் என்பதால் குட்டி ஸ்டோரியை ஓரளவு நம்பலாம்
3/5