அலப்பறை செய்யும் அரவிந்த்சாமி! : அலறும் இயக்குநர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

arvinthsamy2

வாய்ப்பே இல்லாமல் சும்மா இருந்தவரை கூப்பிட்டு நடிக்க வைத்தால் இப்போது அவர் கொடுக்கிற அலப்பறைகளில் இயக்குநர் சமூகமே ஆடிப்போய் கிடக்கிறது.

ரோஜா, பம்பாய், அலைபாயுதே என மணிரத்னம் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாகவே வளர்ந்து வந்தவர் அரவிந்த்சாமி.

ஒரு கட்டத்தில் நடிக்கிற வாய்ப்பு குறையவும் நடிப்பிலிருந்து விலகி தனது சொந்த பிசினஸை பார்க்கப் போய் விட்டார். அவரை மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது கடல் படத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம்.

அந்தப்படம் நொந்தப்படம் ஆனதால் புதுப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாதவரை இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஒன்ராக சேர்ந்து போய் பார்த்து தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டார்கள்.

அரைகுறை மனதுடன் ஓ.கே சொன்னவருக்கு படம் பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதோடு மீண்டும் நடிப்பில் பிஸியாக ஆரம்பித்தவர் விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்துகிற அளவுக்கு பாப்புலராக்கி விட்டது.

Related Posts
1 of 5

எத்தனை பேருக்கும் இப்படி ஒரு ரீ-எண்ட்ரி கிடைக்கும்? அதை தக்க வைக்கிறாரா அரவிந்த்சாமி என்றால் அதுதான் இல்லை.

தன்னை கமிட் செய்ய வரும் இயக்குநர்களை பாடாய்ப்படுத்துகிறாராம்.

தான் நடிக்கிற படங்களில் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வந்து விட்டாலும் அப்படத்தின் இயக்குநர் சொல்வதை கேட்பதே இல்லையாம் இந்த சித்தார்த் அபிமன்யூ.

இப்படித்தான் ‘தனி ஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘துருவா’ படத்திலும் நடித்து வரும் அரவிந்த்சாமி. அப்படத்தின் இயக்குனர் சொல்லும் எதையுமே கேட்பதில்லையாம், அவருடைய இஷ்டத்துக்கு நடிக்கிறார். அதைத்தான் இயக்குநரும் ஷூட் செய்கிறாராம். விஷயம் அப்படத்தின் ஹீரோ ராம்சரண் காதுகளுக்கு போயிருக்கிறது. அவரும் சரி அவர் விருப்பப்படியே நடிக்க விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதே அணுகுமுறையைத்தான் போகன் இயக்குநரிடமும் காட்டியிருக்கிறார் அரவிந்த்சாமி. அவரையும் அப்படத்தின் ஹீரோ ஜெயம்ரவி தான் சமாதானம் செய்திருக்கிறார்.

இப்படியே பண்ணிக்கிட்டிருந்தா இன்னும் ரெண்டு படம் கூட தேறாத ஆளாயிடுவீங்க அரவிந்த்சாமி!