அப்பாவுடன் அதிகம் பழகியதில்லை! – அதிர வைத்த கெளதம் கார்த்திக்

Get real time updates directly on you device, subscribe now.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் ஜி. தனஞ்செயன் தயாரித்திருக்கும் இப்படத்தை திரு இயக்கியிருக்கிறார்.

படம் வரும் ஜூலை 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதனையொட்டி படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஹீரோ கவுதம் கார்த்திக், ரெஜினி, வரலட்சுமி, சதீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Related Posts
1 of 12

அப்போது பேசிய ஹீரோ கவுதம் கார்த்திக் ”நான் அப்பாவுடன் அதிகம் பழகியதில்லை” என்று சொல்லி அதிர வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது… ”நான் சின்ன வயதில் ஊட்டியில் படித்தேன். அதனால் அப்போது எனக்கு அப்பாவோடு அதிகம் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. வருடத்துக்கு ஒரு தடவை தான் என்னை பார்க்க வருவார். அவ்வளவு தான் அவருக்கும் எனக்குமான பழக்கமாக இருந்தது. அதன்பிறகு ‘கடல்’ படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தான் எல்லோரும் அப்பாவைப் பற்றிப் பெருமையாகப் பேசக் கேட்டேன்.

ஆனால் இந்த படத்தில் தான் படப்பிடிப்பில் அவருடைய இன்னொரு பக்கத்தை நான் நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். அப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குனர் திருவுக்கு நன்றி. இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்தவர். அதனால் இந்தப்படத்தை சிறப்பான படமாகக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வைரலாகி விட்டது. பின்னணி இசையிலும் சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார், ‘கடல்’ படத்துக்கு பிறகு பிருந்தா மாஸ்டர் என்னுடைய பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். அப்பா – மகன் உறவைச் சொல்லும் இப்படம் என்னுடைய சினிமா கேரியரில் முக்கியப் படமாக இருக்கும்” என்றார்.