கேரளாவில் நடைபெற்ற’வீர தீர சூரன்- 2 ‘ பிரஸ்மீட்!

Get real time updates directly on you device, subscribe now.

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். சென்னை, ஹைதராபாத், பெங்களூரூவைத் தொடர்ந்து நேற்று திருவனந்தபுரத்தில் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், இயக்குநர் அருண் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் அருண்குமார் பேசுகையில், ” விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்றும் முதல் படம். இந்த அனுபவம் எப்படி இருந்தது என்றால் நாங்கள் இருவரும் இணைந்து பத்து இருபது திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு இந்த படத்தில் இணைந்தது போல் இருந்தது. படபிடிப்பு தளத்தில் அவ்வளவு சௌகரியமாக .. இயல்பாக பணியாற்ற வைத்தார். விக்ரம் சார் – எஸ் ஜே சூர்யா சார் ஒரு திரைப்படத்தில் இருந்தால் … அதிலும் எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கிறார் என்றால்… அங்கு பாசிடிவ் நிறைய இருக்கும். சிறந்த நடிகர் சுராஜும் இதில் இணைந்திருக்கிறார். அனுபவம் மிக்க நடிகர்கள் ஒன்றிணைந்து என்னை போன்ற இயக்குநர்களின் கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். துஷாரா விஜயனும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார். தயாரிப்பாளருக்கும் நன்றி.

இந்தப் படம் ஒரு ரியலிஸ்டிக்கான மெயின் ஸ்ட்ரீம் கமர்சியல் ஃபிலிம். உங்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” இந்த திரைப்படம் Raw & Rustic ஃபிலிம். இயக்குநர் அருண்குமார் இரண்டு வகையான படங்களையும் இயக்கி இருக்கிறார். அதாவது ‘சேதுபதி’ போன்ற கமர்சியல் படங்களையும் இயக்கி இருக்கிறார். ‘சித்தா’ போன்ற சென்சிடிவ்வான படங்களையும் இயக்கி இருக்கிறார் இந்த இரண்டு படத்தின் கலவையாக இந்த ‘வீர தீர சூரன்’ படம் இருக்கும்.

இந்தப் படத்தில் வழக்கமான மாஸ் கமர்சியல் திரைப்படங்களுக்கான இலக்கணத்தை மாற்றி புதிதாக முயற்சி செய்து இருக்கிறோம். ஹீரோ இன்ட்ரொடக்ஷன்… ஃபைட்.. சாங்ஸ்.. மாஸ் சீன்ஸ்.. என வழக்கமான விசயங்கள் இல்லாமல் புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறோம். இது எங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம். தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

Related Posts
1 of 10

இந்த திரைப்படத்தில் அனைவரும் சிறந்த பெர்ஃபாமர்ஸ். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இது போன்ற ஒரு கமர்சியல் திரைப்படத்தில் சிறந்த நடிகர்கள்.. ஒவ்வொரு காட்சிகளிலும் தங்களுடைய ஷட்டிலான பெர்ஃபார்மன்ஸை வழங்கி இருக்கிறார்கள். இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் காட்சிகளிலும்… பாடல்களிலும்… சண்டை காட்சிகளிலும்.. உரையாடல்களிலும் … நுட்பமான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு எமோஷனல் கன்டென்ட் உள்ள படம். இதில் எஸ். ஜே. சூர்யாவும் நன்றாக நடித்திருக்கிறார். நான் அவருடைய ரசிகன். அவர் இயக்கிய ‘குஷி’, ‘வாலி’ போன்ற படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் நடிகராக மாறி அதிலும் வெற்றி பெற்று வருகிறார். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பையும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

ஆக்ஷன் ஓரியண்டட் வயலன்ட் ஃபிலிமில் நடிகைகளுக்கு பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்காது என்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயனுக்கு நன்றாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கு இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை இயக்குநர் அளித்திருக்கிறார். இயக்குநர் அருண் குமாரின் படைப்பில் பெண் கதாபாத்திரம் வலிமையாக எழுதப்பட்டிருக்கும்.

சுராஜ் – ஒரு மல்டி டேலன்டெட் ஆக்டர். இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது அவருக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் பேசி, பழகி தமிழில் பேச கற்றுக் கொண்டார். இந்தப் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ‘பீப் பாக்ஸ்’ செய்து அனைவரையும் கவர்ந்தார்.

நான் மலையாளத்தில் அறிமுகமாகும் போது எனக்கு ‘மதி’ என்ற ஒரு வார்த்தை மட்டும்தான் தெரியும். இதனால் மலையாள படங்களில் நடிக்கும் போது.. மலையாள மொழி பேசி நடிக்கும் போது உள்ளுக்குள் டென்ஷனும் , பதற்றமும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு நீளமான காட்சியில் சுராஜ் தமிழில் அற்புதமாக நடித்துக் கொண்டே பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.

இந்தப் படத்தில் அனைவருக்கும் கிரே ஷேடு இருக்கும். அதற்கு ஒரு நியாயமும் இருக்கும். ஹீரோயின் கேரக்டர் மட்டும் தான் பாசிட்டிவ்வாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான ‘பொன் மான்’, ‘மார்க்கோ’,’ ஆவேசம் ‘போன்ற படங்கள் வெளியாகி மலையாள திரையுலகின் வளர்ச்சியை காட்டுகிறது. மலையாள திரையுலகம் தற்போது சிறப்பாக இருக்கிறது. ‘மின்னல் முரளி ‘பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. ‘கே ஜி எஃப்’, ‘காந்தாரா’, ‘ பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர் ‘ என பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் பான் இந்திய படமாக வெளியாகும் பிருத்விராஜின் எம்புரான் படமும் வெற்றி பெற வேண்டும். நான் மோகன்லாலின் ரசிகன். எம்புரான் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. அந்தத் திரைப்படத்துடன் எங்களுடைய வீர தீர சூரன் படமும் வெளியாகிறது. இதுவும் ஒரு எமோஷனலான படம். இந்த இரண்டு படமும் வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கேரள ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.