‘முஃப்தி’ கன்னட ரீமேக்கில் இணையும் சிம்பு – கெளதம் கார்த்திக்!
‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு.
அந்தப் படத்தின் கேரக்டருக்காக உடல் எடையைக் குறைக்க வெளிநாடு சென்றார் சிம்பு. இதனால் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இதற்கிடையே சிம்பு – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்கான இப்படத்தை கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார்.
நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.