“ஜெஸ்ஸி சாட் செய்த வாட்ஸ்அப்”

Get real time updates directly on you device, subscribe now.

‘கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா ஓ.கே தான்’ என்ற பழமொழி கிராமங்களில் ஃபேமஸ். அதை மெய்ப்பித்து காட்டி இருக்கிறது சிம்பு திரிஷா கெளதம் மேனென் காம்போ. சமீபத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலே பெரும் வீவ்ஸை எட்டியது. அதே சமயம் பல எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது.

Related Posts
1 of 36

விண்ணைத் தாண்டி வருவாயா2 படத்திற்கான முன்னோட்டமாக இந்தக் குறும்படத்தை கெளதம் இயக்கி இருந்தார். சிம்புவும் திரிஷாவும் நடித்திருந்தனர். இருவரும் போன் பேசிக்கொள்வது தான் படம். ஆனால் திரிஷா வேறு ஒருவருடன் திருமணம் ஆனவர். சிம்புவோ முரட்டு சிங்கிள். அதனாலே பல ஏரியாக்களில் கடுப்பு கிளம்பியது. ஆனால் அதை விட வீவ்ஸ் எகிறி இருப்பதால் இது பெரிய படமாக வெளிவரும் போது பெரிய பிஸ்னெஸ் கன்பார்ம் என்கிறார்கள். அது போதாதா? அடுத்தும் “ஜெஸ்ஸி சாட் செய்த வாட்ஸப்”னு கெளதம் களம் இறங்கிடுவாரே!