பாலின சமத்துவ விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20-வது மும்பை திரைப்பட விழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்தத் திரைப்பட விழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப்படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.