‘கெத்து’ பொங்கலுக்கு வரணும் : கொஞ்சம் மனசு வையுங்க ஹாரிஸ்

நமக்கு என்ன வருதோ அதை செஞ்சிட்டுப் போறது தான் நல்லது என்பது தான் உதயநிதியின் கொள்கை!
ஹீரோவாக நடித்த மூன்று படங்களிலுமே நல்லவேளையாக சந்தானம் இருந்ததால் ‘கிரேட் எஸ்கேப்’ ஆனார். இருந்தாலும் ஒரே மாதிரியான டேஸ்ட் என்பது ரசிகர்களுக்கு திகட்டும் தானே? அதை உதய் மட்டும் அறியாதவரா என்ன? இதோ செம பக்காவான ஒரு ஆக்ஷன் கதையோடு ‘கெத்தாக’ பொங்கல் ரேஸூக்கு தயாராகி வருகிறார்.
‘மான் கராத்தே’ இயக்குநர் திருக்குமரன் இயக்க உதய்க்கு ஜோடி எமிஜாக்சன்.
பிரஸ்மீட்டில் பாடல்களைப் பார்க்கும் போது சுகுமாரின் ஒளிப்பதிவு ஏசியில் கூலிங் மோட்டை அமுத்தி வைத்து உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தினார்.
”எந்த ஒரு மலை உச்சிய பாத்தாலும் அதுல சுகுமார் சார் ஒரு ஷாட் வைக்கணும்னு ஆசைப்பட்டு கெளம்பிடுவார். அது அவரோட ட்ரேட்மார்க் போல. அப்படித்தான் இந்தப் படத்துக்கும் ஒரு மலை உச்சியில என்னையும் எமியையும் நிக்கச் சொல்லி ஆட வெச்சார். கீழே இறங்கிற வரைக்கும் அப்படி ஒரு பயம். இப்போ அதோட அவுட்புட்டை ஸ்கீரின்ல பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவர் மேலும் தொடர்ந்தார்…
”மூணு படங்களா காமெடியா பண்ணிட்டு இது ஆக்ஷனா ஆனதுனால எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருச்சு. இந்த ஆக்ஷன் படத்தை கமிட் பண்ணிக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு கூட தோணுச்சு. படத்துல ரெண்டு பைட் சீன்ஸ் இருக்கு. அதுல கிளைமாக்ஸ் பைட் எனக்கும் விக்ராந்த்துக்கும் தான். ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் ரெண்டு பேரும் நிஜமாகவே விக்ராந்த்தை அடிக்கச் சொன்னாங்க. அப்போதான் ரியல்லா இருக்கும்னாங்க. ஏங்க அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எப்படிங்க? அடிக்கிறதுன்னு கேட்டேன். ஆனாலும் அவங்க விடல. பெண்டெடுத்துட்டாங்க… என்னை மாதிரியே விக்ராந்த்தும் இந்தப் படத்துல ரொம்பக்கஷ்டப்பட்டு நடிச்சார்.
இப்போ இன்னொரு படத்துல நான் நடிக்கிறப்போ அந்த ஸ்டண்ட் மாஸ்டர் எப்படி சார் இவ்ளோ ஈஸியா ஸ்டண்ட் பண்றீங்கன்னு கேட்டார். ஏங்க நீங்க வேற கெத்து படத்துல என்னை வெச்சி செஞ்சு அனுப்பியிருக்காங்க”ன்னு ஸ்டண்ட் போட்டதைப் பத்திச் சொன்னேன் என்றார் சிரித்துக் கொண்டே…
”இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமா இருக்கும். பாடல்களை எல்லாமே ஹாரீஸ் சார் சூப்பரா கொடுத்துட்டார். ஐ ட்யூன்ஸ்ல பாடல்கள் வந்த சில மணி நேரங்கள்லேயே டாப் டென்ல வந்துடுச்சு. அந்தளவுக்கு சாங்க்ஸ் ஹிட்! அதே மாதிரி படத்தோட பின்னணி இசையும் இருக்கும். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் பண்ணனும்னு நெனைச்சு வேலைகளை செஞ்சுக்கிட்டு இருக்கோம். என்ற இயக்குநர் திருக்குமரன் இசையமைப்பாளர் ஹாரிஸிடம் பொறுக்க மாட்டாமல் அதை மேடையில் கேட்டே விட்டார்.
ஹாரிஸ் சார் ‘கெத்து’ பொங்கலுக்கு வர்றது உங்க கையில தான் இருக்கு, கண்டிப்பா வரணும் சார் என்றார்.
கொஞ்சம் மனசு வையுங்க ஹாரிஸ்…