ஜெய்யை பார்த்து மிரண்ட சுரபி!
இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை என பெயர் பெற்றார் நடிகை சுரபி.
தற்போது இவர் ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிலிம் டிபார்ட்மெண்ட் சார்பில் சுஷாந்த் தயாரிக்க, இயக்குநர் மணிமாறன் இயக்குகிறார்.
படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்த அனுபத்தை கேட்டபோது : “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் நேருக்கு நேர் பேசும் கதாபாத்திரம். அதனாலோ என்னவோ இந்த கதாபாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரமாகி விட்டது.
இப்படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில். எந்த காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிபெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெரிய ஈடுபாடு கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகளில் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.
மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்கக் கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்’ ‘அட்டாக்’ படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது “ ‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த ரோல்எனக்கு சவாலாகவே இருந்தது. என்றார் சுரபி.
‘மாரி’யில் நான் தான் ஹீரோ; தனுஷ் டம்மி பீஸ் : பார்ட்டியில் உளறிய ரோபோ சங்கர்!