ஜெய் ஜோடியாக அறிமுகமாகும் ‘பிக்பாஸ்’ நடிகை!
தெலுங்கு ‘பிக்பாஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை பானுஸ்ரீ ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
“இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன். அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம்.
ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்” என்கிறார் பானுஸ்ரீ.
திருக்கடல் உதயம் தயாரிக்கும் இந்த படத்தில் உலக அளவில் 450சிஜி தொழில்நுட்ப வல்லுனர்கள் வி தினேஷ்குமார் மேற்பார்வையில் வி.எப்.எக்ஸ் பணிகளை செய்து வருகிறார்கள். படத்தில் 90 நிமிடம் அளவிலான சிஜி காட்சிகள் இருக்கின்றன.