தண்ணீர் பிரச்சனை இல்லையா? – கடுப்பான கரு.பழனியப்பன்

Get real time updates directly on you device, subscribe now.

தர்வா முரளி நடிப்பில் வெளியான ‘100’ படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘கூர்கா’.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் ஜூன் 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் கரு.பழனியப்பன் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பிரச்சனை பற்றி ஆளுங்கட்சியினர் பேசும் பேச்சுகள் குறித்து செம கலாய் கலாய்த்தார்…

Related Posts
1 of 140

அவர் பேசியதாவது, ”நேற்றைக்கு ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர், தமிழ்நாட்டுல தண்ணீர்ப் பஞ்சமே கிடையாதுன்னு சொல்லிருக்கார்.

இதுதான் இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தி. அந்த செய்திக்கு கீழேயே, ‘தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம்’னு அதுக்கு பக்கத்திலேயே இன்னொரு செய்தி வந்திருக்கு.

இவர்கள் எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக சௌகிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த ‘கூர்கா’வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள்” என்று செம கலாய் கலாய்த்தார் இயக்குனர் கரு.பழனியப்பன்.