‘வேலையில்லாத வெட்டிப்பசங்க!’ : அஜித் ரசிகர்களுக்கு கொட்டு வைத்த ஜி.வி.பிரகாஷ்

Get real time updates directly on you device, subscribe now.

gvp

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை என்கிற நெருக்கடிக்கு மத்தியிலும், ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீசாகி கலவையான விமர்சனங்களோடு தியேட்டர்களில் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.

இந்தப்படம் ரிலீசானதிலிருந்தே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கேலி செய்து விட்டார்கள் என்று ஜி.வியிடமும், ஆர்.ஜே பாலாஜியிடமும் சண்டை போட்டு ரசிகர்களின் தொல்லை தாங்காமல் சோஷியல் மீடியாவிலிருந்து நேற்று வெளியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அதேபோல நடிகர் சிம்புவும் ‘ப்ளாக் பஸ்டர் ஹிட்’ என்கிற வாசகத்தோடு வந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ பட விளம்பரத்தையும் கடுமையாகத் தாக்கியிருந்தார்.

இப்படி நாலா பக்கமும் விமர்சனங்கள் வந்தாலும் கூடவே இப்போது அஜித் ரசிகர்களும் ஜி.வி பிரகாஷை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

Related Posts
1 of 14

‘தலைவா’, ‘தெறி’  என விஜய்யின் அடுத்தடுத்த படங்களுக்கு ஜி.வி இசையமைத்ததால் அவர் விஜய்யின் விசுவாசி என்று நினைத்து ஜி.வியின் நடிப்பைப் பற்றியும், அவரது தோற்றத்தைப் பற்றியும் சோஷியல் மீடியாக்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஒரு கட்டம் வரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜி.வி, இனியும் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று தன்னை விமர்சிக்கும் அஜித் ரசிகர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆமாம், ”நீங்க எல்லாருமே ரொம்ப நாளா வேலையில்லாம வெட்டியா இருக்கீங்க. சீக்கிரமே உங்களுக்கு வேலை கிடைக்கும். அதுக்காக அழக்கூடாது சரியா…?” என்று தனது தோற்றத்தை கேலி செய்யும் அஜித் ரசிகர்களுக்கு செம நக்கலாக கொட்டு வைத்திருக்கிறார் ஜி.வி.

தன்மானத்தை உரசிப் பார்த்த ஜி.வியின் இந்த கருத்துக்கு அஜித் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷன் கொடுக்கப் போறாங்களோ..?