‘கெத்து’ மட்டும் தான் இருக்கு : ஆனாலும் கலங்க மாட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ்!
‘அனிருத்’ என்கிற அஞ்சு கிலோ இசையமைப்பாளர் வரும் வரும் யுவனுன், ஹாரிஸூம் தான் காலட் ட்யூன் ஹீரோக்களாக இருந்தார்கள். அவர்கள் இருவரும் போட்ட பல பாடல்கள் ரசிகர்களின் காலர் ட்யூன்களாகவும் ரிங் டோன்களாகவும் இருந்தன.
இப்போதோ நிலைமை தலைகீழ்
யுவனும் செலக்டீவ்வாகத்தான் படங்களை ஒப்புக்கொள்கிறார்.
ஹாரீஸ் நிலைமையோ படு மோசம்.
வருடத்துக்கு குறைந்தது நான்கைந்து படங்களையாவது கையில் வைத்துக் கொண்டு இசையமைத்து வரும் ஹார்ஸ் ஜெயராஜ் இப்போது ஒரே ஒரு படத்தை மட்டுமே வைத்திருக்கிறார்.
ஒரு படத்துக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு இசையமைப்பதால் தான் அனிருத்தே பெட்டர் என்று பல இயக்குநர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பக்கம் போவதில்லையாம்.
கைவசம் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் கெத்து படத்தை மட்டுமே வைத்திருக்கும் ஹாரீஸ் என்னை நம்பி வர்ற இயக்குநர்களுடம் மட்டுமே வேலை செய்வேன். தேடிப்போய் வாய்ப்பு கேட்கவே மாட்டேன் என்று முன்ன இருந்த கெத்து கொஞ்சமும் குறையாமல் இருக்கிறார்.