சாதனைக்கு மேல் சாதனை! : உச்சக்கட்ட உற்சாகத்தில் ‘புலி’ டீம்
விஜய் நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு புலி படத்துக்கு ஏற்பட்டுள்ளது.
படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் கொடுத்த மகத்தான ஆதரவில் தயாரிப்பாளர் உட்பட யூனிட் மொத்தமும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து ட்விட்டர் ட்ரென்ண்டிங்கில் பல கட்டங்களாக சாதனை படைத்து வந்த புலி ட்ரெய்லர் சமீபத்தில் யு ட்யூப்பில் 1 லட்சம் லைக்குகளை தாண்டி சாதனை படைத்திருக்கிறது.
இந்திய அளவில் அதிக லைக்குகளை இதுவரை எந்த தமிழ்ப்படமும் பெற்றதில்லை. ஹிந்தியில் சல்மான்கான் நடித்த ‘கிக்’ படம் தான் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. இப்போது அந்த சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது ‘புலி’.
இதுவே படத்தின் முதல் வெற்றி என்கிற மகிழ்ச்சியில் அக்டோபர் 1 ம் தேதி ரிலீசுக்கு படத்தை தயார் செய்து வருகிறார் இயக்குநர் சிம்புதேவன்.