”நிறைய துரோகத்தை பார்த்துட்டேன்” – கண்கலங்கிய சிவகார்த்திகேயன்

Get real time updates directly on you device, subscribe now.

சிவகார்த்திகேயனும், டைரக்டர் எம்.ராஜேஷும் இணைந்த படம் ”மிஸ்டர் லோக்கல்”.

மிகுந்த எதிர்பார்ப்போடு சென்ற மே மாதம் 17-ம் தேதி ரிலீசான இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூல் ரீதியாக அந்தப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

இதற்கிடையே ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் லேசாக கண்கலங்கியபடி பேசினார்… “ஜெயிக்கும் போது ஒரு அணியா நிற்கிற மாதிரி தெரியும். தோற்கும் போது தான் தனியா நிற்கிற மாதிரி தெரியும். ஆனா தோற்கிறதோ, தனியா நிற்கிறதோ பிரச்சனையில்லை. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன்.

‘மிஸ்டர் லோக்கல்’ படம் சரியாகப் போகவில்லை. அது கண்டிப்பா தோல்விப்படம் தான். என்னுடைய அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. உங்க வாழ்க்கையில நடந்த கதைகள், உங்களுக்கு பிடிச்ச கதைகள், நாமெல்லாம் ரசிக்கிற கதைகள் இதைத்தான் அடுத்தடுத்து என்னோட படங்கள் லிஸ்ட்ல வெச்சிருக்கேன்.

Related Posts
1 of 159

இதெல்லாமே ஒரு விளையாட்டு தான். ஒரு விளையாட்டுல தோற்று விட்டோம் என்றால் அந்த விளையாட்டு தான் முடியும். வாழ்க்கை முடியாது. அப்படித்தான் நான் நம்புறேன்.

நான் கடந்து வந்த வலி, வேதனை, நட்பு, பாசம், துரோகம் அதைத்தாண்டி இருக்கிற வெறி. அந்த வெறி என்னை விடாது. நான் ஓடிக்கிட்டே தான் இருப்பேன். அடுத்தடுத்து நான் நடிக்கிற படங்கள் எல்லாமே என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும்.

”மிஸ்டர் லோக்கல்” கூட தயாரிப்பாளருக்கு பெரிய லாபம் கொடுத்த படம் தான். ஆனால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை ” என்றார் சிவகார்த்திகேயன்.