ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து விட்டதா? – அதிர வைத்த கருத்து கணிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

rajiniமிழ்சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் வரிசையை எடுத்துக் கொண்டால் அதில் ரஜினி, கமல் பெயர்கள் தான் முதல் இரண்டு பெயர்களாக இடம்பெறும்.

பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரையில் இவர்களுடைய படங்கள் தான் இன்றளவிலும் முன்னிலையில் இருக்கின்றன. இவர்களுக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித் என அடுத்தடுத்த ஹீரோக்கள் இடம்பெறுவார்கள்.

தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருப்பதையடுத்து அதை நிரப்புகிற இடத்தில் ரஜினி, கமல் இருவருடைய பெயர்களும் அண்மைக்காலமாக அடிக்கடி அடிபட்டு வருகிறது.

”ரஜினியோ இன்னும் போர் வரவில்லை, வரும் போது பார்த்துக் கொள்ளலாம்” என்று தனது அரசியல் நிலைப்பாட்டை சொல்லி விட்டார். ஆனால் கமலோ ”நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டு அதற்காக வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்.

அதிலும் கமலின் சமீபத்திய நடவடிக்கைகள் எல்லாமே தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் தூக்கத்தை தொலைத்து விட, உண்மையிலேயே ரசிகர்கள் மத்தியில் ரஜினி, கமல், விஜய் மூவரில் யாருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருக்கிறது? என்பது குறித்தான கருத்துக் கணிப்பு ஒன்றை பிரபல நியூஸ் சேனலான நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்தியிருக்கிறது.

Related Posts
1 of 145

அதில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார்? என்கிற பிரதான இரண்டு கேள்விகள் இடம்பெற்றிருக்கிறது.

அந்தக் கேள்விகளுக்கு, கமல் தான் சவாலாக இருப்பார் என்று பெரும்பான்மையோர் கருத்து கூறியிருக்கிறார்கள்.

அவருக்கு அடுத்த இடத்தில் ரஜினியும் மூன்றாவது இடத்தில் விஜய்யும் இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் மத்தியில் ரஜினிக்குத் தான் அதிக செல்வாக்கு இருந்தது. அப்படிப்பட்ட ரஜினியை விட கமல் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட நடிகராக வந்திருப்பது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.