‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆன ‘எங்க வீட்டுப் பிள்ளை’
‘மெரினா’ படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ்.
அதன்பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது முறையாக பாண்டிராஜ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பி அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் கதையாக தயாராகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘சதுரங்க வேட்டை’ நட்டி நடிக்கிறார். இவர்களுடன், பாரதிராஜா, யோகிபாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
முன்னதாக ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று தலைப்பு வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்தப்பட நிறுவனம் அந்த தலைப்பை தர மறுத்து விட்டது. இதனால் தற்போது அந்த தலைப்பில் சிறிய மாற்றம் செய்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் செப்டம்பர் மாதம் படம் வெளிவருகிறது.