‘ஹாட் ஸ்பாட் 2much ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Related Posts
1 of 3

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாட் ஸ்பாட் 2much எனும் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை KJB டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் (Vishnu Vishal Studios) வழங்குகிறது.‌

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் , வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.