ரமண மகரிஷி ஒருவரே ‘சத்குரு’ : ஜக்கி வாசுதேவை கலாய்த்த இசைஞானி!

Get real time updates directly on you device, subscribe now.

ilayaraja

டக்கத்திய இசையை விரட்டி விட்டு தென்னிந்திய மண் வாசனைப் பரப்பும் பாடல்களைக் கொடுத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் இசைஞானி இளையராஜா.

இரவோ, பகலோ, கோபமோ, சந்தோஷமோ எந்த சுழலுக்கும் அவருடைய பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை. அப்படிப்பட்ட பெருமைக்குரிய இசைஞானியின் இளையராஜாவின் பிறந்தநாள் விழா நேற்று ஜூன் 2ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் இசை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

Related Posts
1 of 12

நாள் முழுவதும் இசைஞானியின் பாடல்களால் அரங்கம் அதிர மாலையில் உலகநாயகன் கமல்ஹாசன் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் ரமண மகரிஷி பற்றிய ஒரு பாடலைப் பாடிய இசைஞானி அது சம்பந்தமான பேச்சில் தற்போது சத்குரு என்று சொல்லிக்கொண்டு திரியும் ஜக்கி வாசுதேவை கடுமையாகச் சாடினார்…

இந்த உலகில் ரமண மகரிஷி ஒருவர் தான் சத்குரு. ஆனால் ‘சத்குரு’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்கலாம் சத்குரு கிடையாது. ரமண மகரிஷியின் பெருமையைக் குறித்துதான் பேசுகிறேன். நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. அவர், ஆடு, மாடுகளுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர். கமல் என் சகோதரர். இதை நான் சொல்வதற்காகவே, நேரில் வந்து வாழ்த்து சொல்லியுள்ளார் அவர். ரஜினி எனக்கு போன் செய்து, ‘வாழ்த்துகள் சாமி’ எனக் கூறினார்’, என்றார் இசைஞானி.

ஞானி சொன்னா சரியாத்தானே இருக்கும்!